மதுரை || அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் உறவினர்கள் காருக்கு தீ வைப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரை || அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் உறவினர்கள் காருக்கு தீ வைப்பு.!

மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் தொகுதியின் கடந்த 2001 - 2006 ம் ஆண்டு அதிமுக  சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் பொன்னம்பலம். இவருடைய வீடு சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் உள்ளது. இவருடைய வீட்டின் அருகே உறவினர்களின் வீடுகளும் உள்ளது.

அதில், பெரும்பாலானவர்களின் வீடுகளில் கார்கள் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு பொன்னம்பலத்தின் உறவினர்கள் பிரபு மற்றும் வேலுமணி உள்ளிட்டோரது வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துச் சென்றுள்ளனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், கார்களின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்து நாசமாகி உள்ளன.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் உறவினர்களது கார்கள் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜுன் மாதம் 25ம் தேதி கருவனூரில் உள்ள  கோயிலில் முதல் மரியாதை அளிப்பதில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பொன்னம்பலம் மற்றும் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் விளைவாக பொன்னம்பலத்தின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fire to admk ex mla relatives car in madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->