அறந்தாங்கி பிளாஸ்டிக் குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


அறந்தாங்கி பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் திறந்தவெளி பிளாஸ்டிக் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.

ஆனால் தீ மளமளவென வேகமாகப் பரவியதால் அருகில் உள்ள குப்பை கிடங்கிற்கு தீ பரவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்டிக் குடோன் மற்றும் குப்பைக்கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire at Aranthangi Plastic godown


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->