பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து! புகையில் சிக்கிக்கொண்ட ஆசிரியர் உயிரழப்பு! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் பெண்கள் தங்கும் விடுதியின் முதல் மாடியில் பிரிட்ஜ் ஒன்று வைத்து இருந்தனர். இன்று அதிகாலை அந்த பிரிட்ஜ் வெடித்துச்சிதறி அம்மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்தில், அதிகமான கருப்பு புகை வெளியேறிய நிலையில் அங்கு பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்பொழுதுதீ விபத்தில் இருந்து இரண்டாவது மாடிக்கும் புகை பரவுவதை தடுக்க அங்கிருந்தவர்கள் கதவை பூட்டிக் கொண்டனர்.

இநிலையில், 2-வது மாடியில் இருந்த பலரும் கட்டிடத்தின் மேல் உள்ள மொட்டை மாடிக்கு சென்று உயிரை காப்பாற்றி கொண்டனர். இதன்படி தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் சுதாரித்துக்கொண்டு அந்த அறையில் உறக்கத்தில் இருந்த நபர்களை எழுப்பி அங்கிருந்து கீழே செல்லுமாறு அனுப்பி வைத்தார்.

புகை மண்டலத்துக்கு நடுவில் சிக்கிய அவர்களும், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் உயிர் தப்பினார்கள். ஆனால் புகையில் சிக்கிக்கொண்ட ஆசிரியர் பரிமளா சவுந்தரிஅந்த இடத்தில அதிக புகையால் மூச்சுவிட முடியாமல் மயங்கி கீழே விழுந்தார்.

இநிலையில், அவர் சிறுது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தன்னை நினைத்து பார்க்காமல் கடைசி நேரத்திலும் மற்றவர்களை காப்பாற்றிவிட்டு தன் உயிரை மாய்த்து கொண்ட ஆசிரியை பரிமளா சவுந்தரியின் செயலை கண்டு சக பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire accident in womens hostel The teacher was trapped in the smoke and died


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->