தமிழக மீனவர்கள் 12 பேருக்கு 2 கோடி அபராதம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவை குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாலத்தீவு எல்லை அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 23-ம் தேதி மாலத்தீவு கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கும் இந்திய ரூபாயில் சுமார் 2.27 கோடி ரூபாய் அபராதம் விதித்து மாலத்தீவு அரசு உத்தரவிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fine to 12 thoothukudi fisher mans


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->