'கஞ்சா பணப் பங்கீட்டில் வெடித்த பகை'...! - கிளாம்பாக்கத்தில் பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... நண்பர் கைது...!
Fight erupted over distribution of cannabis money bomb was thrown at house famous rowdy Kalampakkam Friend arrested
சென்னை புறநகர் கிளாம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட மோதல், நாட்டு வெடிகுண்டு வீச்சில் முடிந்துள்ளது. பிரபல ரவுடியின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியதாக அவரது நண்பரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்கிளாம்பாக்கம் பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான வீரா வசித்து வருகிறார்.

இவரும், அவரது நண்பரான விஜய்யும் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த பணத்தை இருவரும் பிரித்துக்கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பணப் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடு நாளடைவில் கடுமையான தகராறாக மாறியதால், இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆத்திரத்தில் இருந்த விஜய், வீராவின் வீட்டை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது. வெடிகுண்டு வெடித்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது.சம்பவம் நடைபெற்றபோது வீட்டிற்குள் குடும்பத்தினர் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெடிகுண்டு வெடித்த சத்தத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிளாம்பாக்கம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.
வீரா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான விஜய்யை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இதையடுத்து, விஜய் காவலர்களிடம் சிக்கியுள்ளார்.
அவரை கைது செய்த காவலர்கள், நாட்டு வெடிகுண்டு வீச்சுக்கான காரணம், பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எங்கிருந்து பெறப்பட்டது, இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Fight erupted over distribution of cannabis money bomb was thrown at house famous rowdy Kalampakkam Friend arrested