மூச்சுத்திணற உயிரோடு புதைக்கப்பட்ட 30 நாள் குழந்தை.! வெளியான அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


உசிலம்பட்டி அருகே இருக்கும் புள்ளனேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 30 நாட்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், திடீரென அந்த குழந்தை உயிரிழந்தது என்று கூறி வீட்டிற்கு அருகே புதைக்கப்பட்டதாக காவல் துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். 

அந்தப் புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி அந்த குழந்தையை புதைத்த இடத்தைத் தோண்டி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த குழந்தை உயிரோடு புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குழந்தை உயிரோடு தான் புதைக்கப்பட்டது என்பது உறுதியாகியது. இதனைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையின் தாத்தா என்று மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். 

30 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை உயிரோடு புதைத்து கொலை செய்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சில காலங்களுக்கு முன்பு அப்பகுதியில் பெண்சிசுக்கொலை மிகவும் பரவலாக இருந்து வந்தது. 

அரசின் கெடுபிடி நடவடிக்கை காரணமாக பெண் சிசுக்கொலை சமீபகாலமாக இல்லாமல் இருந்தது. இந்த நிகழ்வின் காரணமாக மீண்டும் பெண் சிசுக்கொலை தலைதூக்கி விட்டதா என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

female baby killed by parents in usilampatti


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal