7 வயது சிறுமியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கொடூர தந்தை.. தலைநகரில் அதிர்ச்சி சம்பவம்!
Father kills 7-year-old girl by slitting her throat Shocking incident in the capital
கணவன், மனைவிக்கு இடையே நடந்த நீயா? நானா? சண்டையில் பிஞ்சு குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அயனாவரத்தில் வசித்து வந்த சதீஷ்குமார் என்பவருக்கு , ரெபேக்கா என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சதீஷ்குமார் ஸ்பீக்கர் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். கணவன் ,மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு இது தொடர்பாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் நடப்பதாக கூறப்படுகிறது
. இதனிடையே தனது 7 வயது மகள் ஸ்டெபி ரோஸை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனைவி ரெபேக்கா அவரது கணவர் சதீஷ்குமார் மீது சென்னை ஓட்டேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். இந்த நிலையில் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட போலீசார், ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வர வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
இதனால் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில், ஆலந்தூரில் உள்ள தங்கும் விடுதிக்கு மகள் ஸ்டெபியை அழைத்து சென்று முகத்தில் தலையணையை வைத்து அமுத்தியதுடன் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்"
இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து குழந்தை ஸ்டெபி ரோஸ் உடல் தாய் ரெபேக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியை கொன்ற தந்தை சதீஷ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் மனைவி ரெபெகாவிடமும், அவரது குடும்பத்தாரிடமும் பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை சதீஷ்குமாரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மகளை கொன்ற கொடூர தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து ஆலந்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தீபிகா உத்தரவிட்டார்.
கொலைக்கு காரணமாக இருந்த குழந்தையின் தந்தை சதீஷ் மற்றும் அவருடைய தாயரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை என்று கூறியும், உடனடியாக அவர்கள் இருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழந்தையின் சடலத்தை வைத்து உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
English Summary
Father kills 7-year-old girl by slitting her throat Shocking incident in the capital