பாசிச பாஜக ஒழிக..!! பாசிசம் என்றால் என்ன? பாசிசம் என்பதின் பொருள் என்ன தெரியுமா? முதன்முதலாக உருவான வரலாறு..!!
பாசிசம் என்றால் என்ன? பாசிசம் என்பதின் பொருள் என்ன தெரியுமா? முதன்முதலாக உருவான வரலாறு..!!
பாசிசம்:
20ஆம் நூற்றாண்டில் தோன்றிய தீவிர அரசியல் சித்தாந்தங்களுக்குள் பாசிசமும் ஒன்றாகும்.
இத்தாலியின் சர்வாதிகாரியாகிய பெனிடோ முசோலினி (Benito Mussolini) பாசிச சித்தாந்தத்தின் தந்தையாக கருதப்படுகிறார்.
1922-ஆம் ஆண்டு முசோலினையும்,அவரது பாசிசக்கட்சியும் இத்தாலியில் பதவிக்கு வந்ததோடு பாசிசக் கோட்பாடும் தொடங்கியது.
இதையடுத்து, 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பதவிக்கு வரும் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லர் (Adolph Hitler) முசோலினியை பின்பற்றி நாசிசம் (Nazism) என்ற பெயரில் பாசிசக் கோட்பாட்டை உருவாக்கினார்.
பாசிசம் என்பது என்ன?
பாசிசம் என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால், சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்ற அனைத்து விஷயங்களையும் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். பெரும் முதலாளிகளும் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப காலங்களில் அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.
தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காகத்தான் , வல்லமைக்காகத்தான் எனக் கூறி, மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.
பாசிச தத்துவத்தின் மூலகங்கள் 19 ஆம் நூற்றாண்டின் தீவிர தத்துவங்களிலிருந்து பெறப்பட்டதாகும். எ.கா நீட்சேயின் (Nietzsche) அதிமானுடன் (Superman) என்ற அதிகாரக் கோட்பாட்டினாலும் சொரல் (Sorel) இன் பலாத்காரக் கோட்பாட்டினாலும் ஹெகல் (Hegel) இன் அரசை மேம்படுத்தும் வாதங்களினாலும் பாசிசம் பெருமளவிற்கு வளர்ந்திருந்தது அத்துடன் மாக்கியவல்வியின் கருத்துக்களாலும் முசோலினி கவரப்பட்டிருந்தார்.
பாசிசம் என்பது எங்கு இருந்து வந்தது:
பாசிசம் என்ற சொல் பாஸ்சியோ (Fascio) அல்லது பாஸ்சி (Fasci) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதாகும்.
இத்தாலிய சொல்லாகிய பாஸ்சியோ என்பதற்கான பொருள் இறுக்கமாக கட்டப்பட்ட தடிக்கட்டு (well tied bundle of nods) என்பதாகும். பாசிசம் இத்தாலிய இராணுவத்திற்குள் ஐக்கியம், பலம், ஒற்றுமை என்பவற்றை இறுக்கமாக ஏற்படுத்த முயலுகிறது. புராதன உரோமானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட கோடரிச் (Axe) சின்னமே பாசிச இராணுவத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
அரசின் மகிழ்ச்சிக்காக தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் "பாசிஸ்" எனப்படும்.
English Summary
fascism explanation In Details