விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...! குமரி மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசிடமிருந்து அதிரடி உத்தரவு...!
Farmers hit jackpot Government orders immediate release water from dams Kumari district
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு இணங்க, கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளுக்கு தேவையான நீரை வழங்கும் வகையில் முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறையின் அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு–I மற்றும் சிற்றாறு–II அணைகளில் இருந்து 2026 ஜூன் 1-ஆம் தேதி முதல் 2027 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை பாசனத் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு, வினாடிக்கு 850 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், கிள்ளியூர், திருவட்டார் மற்றும் விளவங்கோடு வட்டங்களுக்குட்பட்ட ஏராளமான கிராமங்கள் பயனடைய உள்ளன.
குறிப்பாக சுமார் 79 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று, நெல், வாழை, காய்கறி மற்றும் பல்வேறு பயிர் சாகுபடிகளுக்கு பெரும் ஆதாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு குமரி மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் சாகுபடி பருவத்திற்கு புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Farmers hit jackpot Government orders immediate release water from dams Kumari district