தாஜ்மகாலில் டொனால்டு டிரம்ப் மகள் டிப்னி...! - பிரமாண்ட அழகை ரசித்த அமெரிக்க அதிபரின் வாரிசு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் இளைய மகளான டிப்னி அரினா டிரம்ப் இந்தியா வருகை தந்துள்ளார். டொனால்டு டிரம்பின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகளான டிப்னி, தனது இந்தியப் பயணத்தை தலைநகர் டெல்லியில் தொடங்கினார்.

டெல்லி வந்தடைந்த அவர், அங்கிருந்து விமானம் மூலம் உத்தரபிரதேச மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ரா நகருக்கு பயணம் மேற்கொண்டார்.

உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் தாஜ்மஹாலை நேரில் பார்வையிட்ட டிப்னி டிரம்ப், அதன் கட்டிடக் கலை நயத்தையும், பிரமாண்ட அழகையும் ரசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தாஜ்மஹால் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னர், அவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். அவரது வருகையை முன்னிட்டு தாஜ்மஹால் வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள இந்த வருகை, ஆக்ரா நகரில் சிறப்பு முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Donald Trump daughter Tibni Taj Mahal heir American president who admired magnificent beauty


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->