மருத்துவமனைக்கு பாம்புடன் சென்ற விவசாயி கூறிய காரணம்..! அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்..!
farmer came to hospital with snake
நாமக்கல், விவசாயி ஒருவர் தன்னை கடித்த கட்டுவீரியன் பாம்பை பிடித்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தான் இந்த விவசாயி ராமசாமி. இவர் அவரிடம் இருக்கும் ஆடுகளை மேய்க்கும் தொழிலிலும் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நிலையில், ராமசாமி ஆடு மேய்ப்பதற்காக வழக்கம்போல சென்றிருந்தார். அப்போது அவரை கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்திருக்கிறது. இதை தொடர்ந்து, கடித்த அந்த பாம்பை விடாமல் துரத்தி கொண்டுச் சென்ற ராமசாமி அந்த பாம்பை பிடித்து கொன்று சாக்குப் பை ஒன்றில் போட்டுகொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு மருத்துவர்களிடம், தன்னை பாம்பு தீண்டியதை விவரித்த விவசாயி ராமசாமி, சாக்குப் பைக்குள் இருக்கும் கட்டுவிரியன் பாம்பை மருத்துவர்களிடம் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்த மருத்துவர்களும், நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதன் பின்னர், ராமசாமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். விவசாயி ராமசாமி செய்த இந்த செயல் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
English Summary
farmer came to hospital with snake