கொளுத்தும் வெயில் - பேருந்துகளில் மின்விசிறி பொறுத்த அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது. அதிலும் குறிப்பாக கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. 

இந்த நேரத்தில் சாலைகளில் வாகனங்களை இயக்குவது கடும் சவாலாக உள்ளது. இந்த சூழ்நிலையில், வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநரின் இருக்கையின் அருகே பேட்டரியால் இயங்கும் மின்விசிறி அமைக்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக 1,000 பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கைகளில் பேட்டரி மின்விசிறி திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது 250 பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது" என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fan fixed town bus in chennai for heat


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->