காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர்...! விரக்தியின் விளிம்பில் வாலிபர் தற்கொலை முடிவு...!
Family opposed love verge despair young man committed suicide
தூத்துக்குடி ஆறுமுகநேரி அருகே, காதலுக்கு பெண் வீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனையில் தவித்த 20 வயது வாலிபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த உச்சிமாகாளியின் மகன் லட்சுமணராஜா (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், லட்சுமணராஜா கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சலிலும் வேதனையிலும் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், உறவினர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வுக்கு குடும்பத்தினர் அனைவரும் சென்றிருந்தனர்.
அப்போது மது அருந்திய நிலையில் அங்கு வந்த லட்சுமணராஜாவை, அவரது தந்தை உச்சிமாகாளி கண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த லட்சுமணராஜா அங்கிருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர், தனது நண்பர் மாதவனுக்கு தொலைபேசியில் பேசி நடந்த சம்பவங்களை தெரிவித்துவிட்டு, வீட்டின் கூரையில் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த நண்பர் மாதவன் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று, லட்சுமணராஜாவை மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே லட்சுமணராஜா உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தார்.இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Family opposed love verge despair young man committed suicide