குடும்ப சண்டை கொடூரம்...! - காவலராக பணியாற்றும் மனைவியை கத்தியால் குத்திய கணவன்...! - Seithipunal
Seithipunal


சென்னை அயனாவரம் பகுதியில் குடும்பத் தகராறு ரத்தக்கறை படிந்த வன்முறையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சத்யா (30), செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நிலையில், தனது கணவர் புருஷோத்தமன் (34) உடன் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு 4 வயது மகள் உள்ளார்.வேலைக்கு செல்லாமல் மதுபோதையில் அடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்துவந்த புருஷோத்தமன், சம்பவத்தன்று நள்ளிரவில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்து, வீட்டில் இருந்த காய்கறி கத்தியால் சத்யாவின் கையில் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் காயமடைந்த சத்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் அடிப்படையில் அயனாவரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Family fight brutal Husband stabs wife who works police officer knife


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->