அதிர்ச்சி! தர்மபுரி அருகே குடும்ப தகராறு கொடூரம்...! - மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்
family dispute near Dharmapuri turned brutal Husband stabs wife death
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள ஜெல்திம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாக்கியராஜ் (35) மற்றும் அவரது மனைவி நிவேதிதா (30) ஆகியோர் 12 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், நிவேதிதாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையறிந்த பாக்கியராஜ் பலமுறை எச்சரித்தும், அறிவுறுத்தியும் பார்த்துள்ளார். ஆனால் அந்த உறவு தொடர்ந்ததால், தம்பதியருக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் குடும்பத் தகராறு நிலவி வந்தது. கிராம மூத்தோர் பலமுறை சமரசம் செய்தும் பிரச்சினை முழுமையாக தீரவில்லை.
நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில், ஆத்திரம் அடைந்த பாக்கியராஜ் வீட்டில் இருந்த காய்கறி வெட்டுக் கத்தியால் நிவேதிதாவின் கழுத்தில் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவத்துக்குப் பிறகு பாக்கியராஜ் தப்பியோடிய நிலையில், தகவலறிந்த பஞ்சப்பள்ளி காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.
பின்னர் வழக்கு பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த திருமணத் தகராறு கொடூர முடிவை எட்டிய இந்த சம்பவம், அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
family dispute near Dharmapuri turned brutal Husband stabs wife death