போலி ஆவணங்கள் பலன் அளிக்கவில்லை...ரூ.24.80 கோடி வரி மோசடி...! - தொழிலதிபருக்கு அபராதத்துடன் 2 ஆண்டு சிறை தண்டனை...!
Fake documents did not work 24point80 crore tax fraud Businessman sentenced 2 years prison fine
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பயாஸ் அகமது, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார். கடந்த 2015–16 நிதியாண்டில், அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ. 24.80 கோடி வருமான வரியைத் திட்டமிட்டு மறைத்து, வெறும் 2 லட்ச ரூபாயை மட்டும் கணக்கு காட்டியது விசாரணையில் அம்பலமானது.

எஞ்சிய பெரும் தொகையைச் சுருட்டும் நோக்கில், அவர் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து வருமானவரித் துறையைத் திசைதிருப்ப முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த இமாலய மோசடி தொடர்பாக வருமானவரித் துறை கொடுத்த புகாரின் பேரில், சி.பி.ஐ. (CBI) களமிறங்கி 2019-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவரது வங்கிச் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு கோவையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணையை எட்டியது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், பயாஸ் அகமது மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கப்பட்டதாகக் கூறி அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.
அதன்படி, அவர் ஏய்ப்பு செய்த முழுத் தொகையான ரூ. 24 கோடியே 80 லட்சத்தையும் அபராதமாகச் செலுத்த உத்தரவிட்டதோடு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
அரசின் வரி வருவாயைச் சூறையாட நினைத்த தொழிலதிபருக்குக் கிடைத்துள்ள இந்தச் சம்மட்டியடித் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Fake documents did not work 24point80 crore tax fraud Businessman sentenced 2 years prison fine