ரத்தகாவு கொடுப்பதுதான் ரசிகர் மன்ற அழகா...? - தவெக விஜய் ரசிகரின் கொடூரச் செயலுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம்...!
Is it beauty fan club give bloo Vanathi Srinivasan strongly condemns cruel act Vijay fan
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"திருச்சியில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, நடிகர் ஜோசப் விஜய்யின் ரசிகர் ஒருவர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்தை காண வந்த அந்த ரசிகர், நடிகரின் உருவப்படம் கொண்ட கட்அவுட் முன்பு சேவலை அறுத்து, அதன் ரத்தம் பதாகையில் தெறிக்கும் வகையில் நடந்து கொண்ட காணொளி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்களைப் பார்க்கும்போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் உண்மையிலேயே சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் திரைப்பட நடிகர்களின் உருவப்படங்களுக்கு பால் ஊற்றுவது, மதுபானம் ஊற்றுவது போன்ற செயல்கள் நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், கொண்டாட்டத்தின் உச்சமாக சேவலை அறுத்து ரத்தம் தெறிக்கச் செய்து பலியிடுவது கடும் கண்டனத்திற்குரியது.தங்களது அபிமான நடிகர்களின் திரைப்படங்களை ரசிகர்கள் பல்வேறு நல்ல வழிகளில் கொண்டாடலாம்.
மரக்கன்றுகளை நடுதல், ஏழை மக்களுக்கு உதவுதல், அன்னதானம் வழங்குதல் போன்ற சமூகநலச் செயல்களில் ஈடுபடலாம். ஆனால், அவற்றை விடுத்து, ஆபத்தான மற்றும் தவறான செயல்களை நடிகர்களின் உருவப்படங்களுக்கு முன்பு நிகழ்த்துவது, பின்னாளில் மற்றவர்களும் பின்பற்றக்கூடிய தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்.திரைப்படக் கற்பனையும் நிஜ வாழ்க்கையும் வெவ்வேறானவை என்பதை ரசிகர்கள் உணர வேண்டும்.
இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ரசிகர்களின் கொண்டாட்டங்கள் சமூகத்திற்கு நல்ல முன்னுதாரணமாக அமையும் வகையில் தமிழக அரசும், திரைத்துறையினரும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Is it beauty fan club give bloo Vanathi Srinivasan strongly condemns cruel act Vijay fan