போலி சான்றிதழ் மூலம் அரசு வேலை: பள்ளி ஆசிரியை மீது வழக்கு பதிவு!
Fake certificate government school teacher against Case registered
தேனி, கண்டமனூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 1999 ஆம் ஆண்டு விஜயபானு (வயது 47) என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றினார்.
இந்நிலையில் தற்போது அவரது சான்றிதழ்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் சரி பார்த்தபோது விஜயபானுவின் பனிரெண்டாம் வகுப்பு சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர், தேனி மாவட்ட காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை விஜயபானுவிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலிச் சான்றிதழ் மூலம் ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Fake certificate government school teacher against Case registered