TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.!
Extension of deadline to apply for TANCET exam
தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும்.
அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்க இன்றே (பிப்ரவரி 22ஆம் தேதி) கடைசி நாளாகும். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 28ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
English Summary
Extension of deadline to apply for TANCET exam