ஆதீன மடங்கள் என்ன அறிவாலய சொத்துக்களா? காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை! - Seithipunal
Seithipunal


தொண்டை மண்டல ஆதீன மடம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. அதன் 233வது ஆதீனமாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மடசீடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான பிரகாச பரமாச்சாரி தேசிக ஸ்வாமிகள் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மடாதிபதியால் மடத்தின் பணிகளை சரியாக செய்ய முடியாத காரணத்தால் பொறுப்பிலிருந்து விலகினார். இந்த நிலையில் மடத்தை நிர்வகிக்க அறநிலையத்துறை சட்டப்பிரிவு அறுவதுின்படி உதவி கமிஷனருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் பொறுப்பாளராக குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். இதற்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது "காஞ்சிபுர தொண்டை மண்டல ஆதீனமடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. தமிழ் மொழியை வளர்ப்பதிலும் தமிழ் பண்பாடான ஆன்மீகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனம் பங்கு அளப்பரியது. 

தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் எடுத்துக் கொள்ளும் தமிழக அரசு கோயில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களின் நலனில் துளியும் அக்கறை காட்டியது இல்லை. சிதலடைந்த கோவில்களை சீரமைப்பதில்லை பராமரிப்பதில்லை. எண்ணெய் விளக்குகள் ஏற்ற கூட முடியாத பல்லாயிரம் கோயில்கள் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 

அந்தக் கோயில்கள் மீதெல்லாம் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டும் அரமில்லாத துறை ஆதீன மடங்கள் மீது தன் பார்வை தீர்ப்பதன் நோக்கம் என்ன? காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தில் 233வது ஆதீனமாக திருச்சிற்றம்பலம் ஞான தேசிக பிரம்மச்சாரியர் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அறநிலைத்துறை அமைச்சரின் உறவினர்கள் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் கொண்ட ஆதின மடத்தை கைப்பற்றும் நோக்கத்தோடு திருச்சிற்றம்பலம் ஞானதேசிக பிரம்மச்சாரியர் சுவாமிகளுக்கு பல தொல்லைகள் கொடுத்து வந்த சூழலில் உடல் நலத்தை காரணம் காட்டி ஆதீனம் தனது பதிவிலிருந்து விலகியுள்ளார்.

கோவில் சொத்துக்கள் கொள்ளை போன போதும், ஆகமங்கள் மீறப்பட்ட போதும், கோவில்கள் காணாமல் போன போதும் அமைதியாக வேடிக்கை பார்த்த அறநிலையத்துறை ஆதீன பதவி விலகி விட்டார் என காரணம் காட்டி காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் இடத்திற்கு வேக வேகமாக செயல் அலுவலர் நியமிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து கோயில்களை எல்லாம் காட்சி பொருளாகவும் வணிக நிறுவனமாக வும் மாற்றியது போதாதா? ஆதீன மடங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளாக மாற்ற அறநிலையத்துறைக்கு ஆசையோ? உடனடியாக தொண்டை மண்டல ஆதினமடத்திலிருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.

அறநிலை துறை அமைச்சரின் அதிகாரத்தை அமைச்சரின் உறவினர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துக்கள் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட்டால் திராவிட மாடல அரசுக்கு நல்லது. இல்லையென்றால் வரும் தேர்தலில் இந்துக்கள் பாடம் புகட்டுவார்கள். தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அறநிலைத்துறையின் ஆக்கிரமிக்கும் எண்ணத்தை கைவிட சொல்ல வேண்டும். மடாதிபதிகள் மனம் வருத்துவது அரசுக்கு நல்லதல்ல" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Executive officer for kanchipuram mutt was condemns


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->