தருமபுரியில் பரபரப்பு! காப்புக்காட்டில் வேட்டை..! - மான் கறி விற்ற வாலிபர்கள் கைது...! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தை பகுதியில் வனவிலங்கு மாமிசம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகப் பாலக்கோடு வனத்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, அதிகாரிகள் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வனக்காவலர்களின் தீவிர கண்காணிப்பில், சந்தேகத்திற்கு இடமான வகையில் மாமிசப் பொட்டலங்களுடன் நின்றிருந்த இரு வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த அஜித் (25) மற்றும் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த சரவணன் (22) என்பது உறுதியானது.

இவர்கள் இருவரும் அரூர் வெள்ளிமலை அருகிலுள்ள காப்புக்காட்டுப் பகுதியில் மானை வேட்டையாடி, அதன் கறியைச் சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டி காரிமங்கலம் பகுதியில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடமிருந்த மான் கறி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் தருமபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Excitement Dharmapuri Hunting reserve forest Youths arrested selling deer meat


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->