எல்லோருக்கும் எல்லாம்..உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒட்டன்சத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின்  திட்ட முகாமில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி 6 மற்றும் 4 வது வார்டு பகுதியில்  நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்,  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி  பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அ மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கடலூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்கள். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளனஅதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம்  "உங்களுடன் ஸ்டாலின்"  திட்ட முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். தற்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விதிமுறைகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் அறிந்து, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும்  தமிழ்நாடு முதலமைச்சர் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில்,  ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் .ப.வெள்ளைச்சாமி, ஆணையாளர் சுவேதா, நகராட்சி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு வட்டாட்சியர் சஞ்சைகாந்தி,சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன்நகர அமைப்பு ஆய்வாளர் தன்ராஜ்,   வருவாய் ஆய்வாளர் விஜய பால்ராஜ் நகரமைப்பு அலுவலர் நகர் மன்ற உறுப்பினர்கள் கண்ணன், சண்முகப்பிரியா, அழகேஸ்வரி, சாந்தி கருப்பணன், அருள்மணி நாட்ராயன், செல்வராஜ் மகாராணி ஏசு, சாந்தி ஆறுமுகம்,கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ் கிராம உதவியாளர்கள் விஜயபாஸ்கரன் பைசல் முகமது மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Everything for everyone Food Minister Chakkaravanis speech


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->