செத்தாலும் தமிழ் பெயர் கொண்ட மதுவை குடித்து சாகுங்கள்..கோரிக்கை விடுத்த அமைப்பு! - Seithipunal
Seithipunal


செத்தாலும் தமிழ் பெயர் கொண்ட மதுவை குடித்து சாக மது பிரியர்கள் தயாராக வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு நல சங்கத்தினர் மது பிரியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் வளர்ச்சி விழிப்புணர்வு சங்கம், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு நல சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பை சந்தித்து தமிழில் படித்து ஆட்சியராக வளர்ந்ததற்கு பாராட்டு தெரிவித்தவுடன் வித்தியாசமான கோரிக்கை மனு ஒன்றை  அளித்தார்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தமிழிலே படித்து ஆட்சியாளராக உயர்ந்ததற்கு அவரிடம் ஆசி பெற வந்திருக்கிறோம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாட வேண்டும். அதற்கு பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும். 

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் 15 சதவீதம் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார் .மேலும்கட்சிக் கொடி இல்லாத கிராமங்கள் இருக்கலாம்... ஆனால் கட்டிங் போடாத கிராமங்கள் கிடையாது. தமிழ்நாடு முழுவதும் கட்சிக் கொடிகளை அகற்ற சொன்ன நீதிமன்றம் அரசுக்கு மதுவை ஒழிக்க உத்தரவு போட முடியவில்லை. அது ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும்.450 வகையான மதுபானங்கள் டாஸ்மாக்கில் விற்கப்படுகிறது. வீரன் என்ற சரக்கு இருந்தது. அதையும் தற்பொழுது எடுத்து விட்டனர்.  டாஸ்மாக் சரக்கு அடித்து செத்தாலும் தமிழ் பெயர் உள்ள சரக்கு அடித்து சாக மது பிரியர்கள் தயாராக வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளதாக கூறினார்.மேலும் ரோஜா பூ, மல்லிகை பூ என ஏதாவது ஒரு பெயரை மதுபானத்திற்கு பெயரிட வேண்டும்.  

ஆங்கிலத்தில் உள்ள பெயரை முற்றிலுமாக தமிழ்நாட்டிலிருந்து நீக்க வேண்டும்.  கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் டாஸ்மாக்கை தொடங்கிய தமிழக அரசு தமிழ் பெயர் உள்ள சரக்குகளை விற்க முன்வர வேண்டும்.  சரக்கு குடித்து இறப்பவர்கள் தமிழ் பெயரில் உள்ள சரக்கை தான் குடித்து இறந்தோம் என கூறும் வாய்ப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 61% பேர் மது குடிப்பவர்கள் உள்ளதால் நாங்கள் நேரடியாக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். 

இதனால் 2026 தேர்தல் களம் வித்தியாசமாக இருக்கும்,டாஸ்மாக் சரக்கு போதை பொருளா இல்லையா என்பதை தமிழக அரசு தான் சொல்ல வேண்டும். போதை விழிப்புணர்வு நாள் அன்று கூட டாஸ்மாக் திறந்து இருந்தது.  அதனைத் தொடர்ந்து தான் அணிந்திருந்த துண்டில் மது பாட்டில் திறந்திருப்பது போன்ற படம் இடம்பெற்று இருப்பது குறித்த கேள்விக்குமதுவில் மாணவர்கள் மதி மயங்கி கொண்டிருக்கிறார்கள். மூடியை திறந்தால் தாலி அறுந்து விடும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாங்கள் செயல்படுகிறோம். நாங்களும் தமிழர்கள் தான் எனவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Even if you die drink liquor with Tamil name and die The organization that made the request


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->