#BREAKING | ஐடி ரெய்டில் சிக்கிய கோடிக்கணக்கான பணம்! சிக்கிய சச்சிதானந்தம் வீடு! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!
Erode IT Raid TASMAC lorry Contractor Home
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் திமுக பிரமுகர்களின் வீடுகளில் இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்m ஈரோட்டை சேர்ந்த டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரரின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில், கணக்கில் வராத 21. கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஈரோடு : சக்தி நகர் மூன்றாவது நகர் வீதிகள் சச்சிதானந்தம் என்ற டாஸ்மார்க் லாரி ஒப்பந்ததாரரின் வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சச்சிதானந்தம் வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் கட்டு கட்டாக 2.1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சச்சிதானந்தத்தின் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. 2.1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Erode IT Raid TASMAC lorry Contractor Home