3 திருமணம்.. மனைவியின் சகோதரியுடன் கரம்பிடித்து, மகளை சீரழித்த காமுகன்.. நாமக்கல்லில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்தவன் முருகேசன். இவனுக்கு சாந்தி, கௌசல்யா என்ற இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், சாந்தி முருகேசனை விட்டுச் சென்றவுடன் கௌசல்யாவுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

கௌசல்யாவின் சகோதரியின் கணவர் கடந்த 2008 ஆம் வருடம் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கௌசல்யாவின் வீட்டிற்கு அவரின் சகோதரி சுந்தரி வந்து தங்கியிருந்து சென்றுள்ளார். இதன்போது, சகோதரியின் கணவரான முருகேசனுடன் நெருக்கமான பழக்கம் ஏற்படவே, இதனை கவுசல்யாவும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். 

இதனால் முருகேசன், கவுசல்யா மற்றும் சுந்தரி, சுந்தரியின் மகள் என்று அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெருந்துறை பகுதியில் இருக்கும் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். 

கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுந்தரியின் 13 வயது மகளும் தாயுடன் சேர்ந்து வேலைக்கு சென்றுள்ளார். தீபாவளி அன்று சுந்தரி மற்றும் கவுசல்யா வெளியே சென்றுவிட, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

இதன்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி காமுகன் முருகேசன் பலாத்காரம் செய்துள்ள நிலையில், இதனை வெளியில் சொன்னால் தாய் சுந்தரியின் மற்றும் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதனால் பயந்து போன சிறுமி, இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்த நிலையில், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொடூரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளான். 

இந்நிலையில், சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்ட தாய் சிறுமியிடம் விசாரிக்கவே, தனக்கு நடந்த கொடூரத்தை கண்ணீர் மல்க சிறுமி விவரித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுந்தரி மற்றும் அவரின் சகோதரி கவுசல்யா, காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Culprit sexual abuse wife sisters daughter Police Arrest 3 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal