#BigBreaking | ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதியின் கருங்கல்பாளையம் பகுதியில் வாக்காளர்கள் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு நடந்துள்ளது. 

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 63,469 பேர் வாக்களித்துள்ளனர். இந்த நிலையில், கருங்கல்பாளையம் பகுதி வாக்காளர்கள் தங்களை ஜனநாயக கடமை ஆற்ற விடாமல் தடுப்பதாக கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருங்கல்பாளையம் காமராஜ் மேல்நிலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி 148-ல் வாக்காளர்களை தொடர்ந்து முறையாக அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, 20க்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடிக்கு முன்பாகவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வாக்காளர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டு : நீண்ட நேரம் காத்திருந்தும் தங்களால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், பெண்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட வாக்காளர்களை சமாதானப்படுத்திய போலீசார், தற்போது அவர்களை வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election 2023 karunkal palaiyam protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->