சேலம் டூ சென்னை.. வந்தே பாரத் ரயிலில் ஈ.பி.எஸ் பயணம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு சொகுசாகவும், நேரமும் மிச்சப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த ரயில் சேவை இந்திய அளவில் தொடங்கப்பட்ட 13-வது வந்தே பாரத் ரெயில் சேவை ஆகும். சென்னையில் இருந்து கோவை வரை இரு மார்க்கத்திலும் தினமும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் மூலம் பயணம் செய்துள்ளார். கடந்த வாரம் சேலத்திற்கு சென்ற அவர் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை கோவையிலிருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். இது குறித்தான புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS Travel by Vande Bharat Train from salem to chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->