இ.பி.எஸ். கூட்டத்தின் நடுவே சென்ற தி.மு.க. நிர்வாகியின் கார்! வாக்குவாதம் செய்து கார் கண்ணாடி உடைப்பு அதிமுகவினர்!
EPS DMK executive car drives into the middle of the meeting AIADMK members break the car window after an argument
விருதுநகர்: “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று இரவு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
“திருச்சுழி தொகுதி வளம் பெற, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம்” என உறுதி அளித்தார்.
அவரது கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.தி.மு.க. நிர்வாகியொருவரின் கார் கூட்டத் தளத்தை கடந்து சென்றதாக கூறப்படுகிறது.இதனால் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் அந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்ததோடு, காரில் இருந்தவர்களை விரட்டி அடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் திருச்சி அருகே நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, காரியாபட்டியில் மீண்டும் ஏற்பட்ட இந்தச் சம்பவம் கவனம் ஈர்த்து வருகிறது.
English Summary
EPS DMK executive car drives into the middle of the meeting AIADMK members break the car window after an argument