இல்லந்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை..எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!
Enrolment of student wing members in every household Leader of the Opposition Siva inaugurated the event
உழவர்கரை தொகுதியில் இல்லந்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை மாநில அமைப்பாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநில உழவர்கரை தொகுதியில், தொகுதி செயலாளர் கலிய.கார்த்திகேயன் ஏற்பாட்டின்பேரில் இல்லம்தேடி மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று காலை தொடங்கியது.
மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் முன்னிலையில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில், மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இல்லங்கள்தோறும் நடந்து சென்று கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை எடுத்துரைத்தும், அதேபோல் கழக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் அமைந்தால் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும் என உறுதியளித்தும்,
மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாணவ, மாணவிகளிடம் கொடுத்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் தங்களை திமுக மாணவர் அணியில் இணைத்துக் கொண்டனர். மேலும் நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து செயல்படும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, அவைத்தலைவர் விஜயரங்கன், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் அமுதன், தமிழ் மகள் ஜான்சி ராணி, தலைமை கழக இளம் பேச்சாளர் வெற்றிச்செல்வன், மாநில துணை அமைப்பாளர்கள் சிவராமன், அம்புரோஸ், அன்பு மாறன், சுகுமார், அன்புச்செல்வம், மனோகர், தொகுதி துணைச் செயலாளர் பானு, பொருளாளர் செந்தமிழ் செல்வன், மாநில பிரதிநிதி அகிலன், வழக்கறிஞர் அணி துணைத்தலைவர்கள் தாமோதரன், திருநாவுக்கரசு, கிளைச் செயளாலர்கள் செல்வராஜ், அன்பு செல்வம், ராதாகிருஷ்ணன், கலியபெருமாள், முருகன், கங்காதரன், ஈஸ்டர் ராஜ், முருகன், அன்பு, ஆறுமுகம், ரங்கநாதன், சுகுமார், ரவி, தொகுதி மகளிர் அணி எவிலின், வசந்தி, கழக்தின் மூத்த முன்னோடிகள் குமரேசன், சிவா, பன்னீர், ஜானகிராமன், தொகுதி இளைஞர் அணி ஆனந்த், ராஜேஷ், அரவிந்த், லோகேஷ், ஆகாஷ், நாராயணசாமி, தொகுதி மாணவரணி வெங்கட், விஜய், வேலவன், நிர்மல், ராஜேஷ், ஜோன்ஸ், சரவணன், கீர்த்தி, கார்த்திக், மணி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Enrolment of student wing members in every household Leader of the Opposition Siva inaugurated the event