பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் துவக்கம் - அண்ணா பல்கலைக்கழகம்.! - Seithipunal
Seithipunal


பி.இ.,பி.டெக் படிப்புகளுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் துவக்கம்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 20-ஆம் தேதி) முதல் 23-ஆம் தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அதன் பின்னா், பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் அக்டோபா் மாதம் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இதற்கு 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனா். அவா்களில் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்பப் பதிவை முடித்துள்ள ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் தகுதியானவா்கள் ஆவர்.

இந்த பொறியியல் கலந்தாய்வு  சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை www.tndte.gov.in  (அல்லது)  www.tneaonline.org  என்ற இணையப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering Councelling starts from today


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->