தொழிலதிபர் வீட்டில் அதிரடி காட்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள் - காட்பாடியில் பரபரப்பு.!!
enforcement department officer raid in vellore katpadi
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அடுத்த தொண்டான் துளசி பகுதியை சேர்ந்தவர் மேத்தா கிரிரெட்டி. இவர் வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், கேட்டரிங் சர்வீஸ் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் ஒரே காரில் காட்பாடிக்கு விரைந்து வந்தனர். அங்கு ஓடை பிள்ளையார் கோவில் அருகே மெயின் ரோட்டை ஒட்டி உள்ள மேத்தா கிரிரெட்டி அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின்னர் காலை 7.30 மணிக்கு தொண்டான் துளசியில் உள்ள மேத்தா கிரிரெட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
English Summary
enforcement department officer raid in vellore katpadi