சென்னையில் ரவுடிகள் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி...! கஞ்சா கும்பலைத் துவம்சம் செய்த தனிப்படை...! - ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட பரபரப்பு பின்னணி என்ன...?
end rowdy game Chennai special force that crushed ganja gang What background excitement rowdy being shot dead
சென்னை வண்டலூரில் கஞ்சா விற்பனை தொடர்பான ரகசிய தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், ரவுடி ஒருவரை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வண்டலூர் அருகே கரசங்கால் பகுதியில் பெரிய அளவில் கஞ்சா விற்பனை நடைபெறவுள்ளதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடியாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, கரசங்கால் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை காவலர்கள் கண்காணித்தனர்.இன்று காலை, சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் பையுடன் நின்றிருந்த அந்த இருவரையும் காவலர்கள் நெருங்கிச் சென்றபோது, திடீரென இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற காவலர்கள், ஒருவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மற்றொருவரை பிடிக்க முயன்றபோது, அவர் தப்பிக்க முயன்று காவலர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் வேறு வழியின்றி காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் வண்டலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான செல்வகுமார் மற்றும் கனகராஜ் என்பது தெரியவந்தது.மேலும், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட காவலர்கள், அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி செல்வகுமாரை காவலர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.இந்த கஞ்சா யாரிடமிருந்து வந்தது? யார் மூலம் சப்ளை செய்யப்பட்டது? எங்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
end rowdy game Chennai special force that crushed ganja gang What background excitement rowdy being shot dead