மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
electricity board employee arrested for bribe in chennai
மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
சென்னையில் பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு அடையாறு தாமோதரபுரம் பகுதியில் சொந்தமாக 850 சதுர அடி நிலம் உள்ளது.
இந்த இடத்தில், கடந்த 2019-ம் ஆண்டு கிருஷ்ணகுமார் வாடகைக்கு விடுவதற்காக ஆறு குடியிருப்புகளைக் கட்டியுள்ளார்.

அதில், ஒரு வீட்டிற்கு புதிதாக மின் இணைப்பு பெறவேண்டி கடந்த செப்டம்பர் 14-ம் தேதி அடையாறு பெசன்ட் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியம் என்பவரைச் சந்தித்து மின் இணைப்பு பெறுவது குறித்து கேட்டப்போது, பாலசுப்ரமணியம் மின் இணைப்பு பெறுவதற்கு மின்வாரியத்திற்கு டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும், அதுபோக நிறைய செலவுகள் உள்ளது.
அதனால், 40 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ணகுமார், என்னால் அவ்வளவு தர முடியாது என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியம், நான் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் மின் இணைப்பு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனை விரும்பாத கிருஷ்ணகுமார் கடந்த 19-ம் தேதி லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கிருஷ்ணகுமாரிடம் கொடுத்து இளநிலை பொறியாளர் பாலசுப்ரமணியனிடம் கொடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளார்.

அதன் படி கிருஷ்ணகுமார் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீஸார் பாலசுப்ரமணியத்தை கையும், களவுமாக கைது செய்தனர். பின்னர் பாலசுப்ரமணியம் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
electricity board employee arrested for bribe in chennai