குடிபோதையில் தகராறு: தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற அண்ணன் கைது.!
Elder brother who killed his younger brother by beating with an iron rod in Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிபோதையில் தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மேல பாண்டவர்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கொம்பையா. இவரது மகன்கள் பாண்டி துரை (29) மற்றும் கருப்பசாமி (26) ஆகிய இருவரும் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் நேற்று இரவு கோவில்பட்டியை அடுத்த டாஸ்மார்க் பாரில் மது அருந்த சென்றுள்ளனர். அப்பொழுது இவர்களிடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாண்டிதுரை இரும்பு கம்பியால் கருப்புசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து பாண்டிதுரை தப்பி சென்று விட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, தம்பியை அடித்து கொன்ற அண்ணனை இன்று அதிகாலை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Elder brother who killed his younger brother by beating with an iron rod in Thoothukudi