தற்காலிக நியமனம் என்ற பெயரில் தகுதியற்றவர்களை நியமிக்க முயற்சி..இபிஎஸ் கண்டனம்!
Efforts to appoint unqualified individuals under the guise of temporary appointments EPS condemns
தற்காலிக நியமனம் என்ற பெயரில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தி.மு.க. ஐ.டி. விங் பணியாளர்களை நியமிக்க முயற்சி நடப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-சென்னை ஐகோர்ட் ஏற்கனவே இந்த பணியிடங்களை நிரப்ப வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளதாக பழனிசாமி கூறினார்.மேலும் அந்த உத்தரவை மீறி, திமுக IT பிரிவைச் சேர்ந்த தகுதியற்றவர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டும் கூறினார்.
பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு துறையில் கல்வித் தகுதியும் அனுபவமும் இல்லாதவர்கள் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.2016ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில்,“விதிகள் தளர்த்தப்படுவது விதிவிலக்காகவே இருக்க வேண்டும். வழக்கமாகக்கூடாது”
என்றும் கூறப்பட்டுள்ளது என பழனிசாமி நினைவூட்டினார்.
2022ல் வெளியான அரசாணையில், இந்த பணிக்கு பத்திரிகை, மீடியா சயின்ஸ் துறையில் டிப்ளமோ/பட்டம் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இப்போது அந்தத் தகுதிகளைத் திரும்பப்பெறும் முயற்சி, திமுக அரசின் நிர்வாகத் துறுதி இல்லாத செயலாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தற்காலிக நியமனத்தின் பெயரில் தகுதியற்ற நபர்களை நியமிக்க முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்.TNPSC மூலமாக மட்டுமே இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பட்டம் பெற்ற இளைஞர்களின் வாய்ப்புகளை பறிக்கும் திமுக அரசின் நடவடிக்கையை மாணவர்களும் பத்திரிகைத் துறையினரும் எதிர்க்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
English Summary
Efforts to appoint unqualified individuals under the guise of temporary appointments EPS condemns