இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை..மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoalrship Portal) விண்ணப்பிக்கலாம் என்று  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது :

இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 

2025-26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியிலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 இலட்சம் இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 15.10.2025 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபாக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 31.10.2025 ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https//scholarships.gov.in) (National Schoairship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number பதிவு செய்து 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்தல் மேற்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள். தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும். மேற்படி. OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது விண்ணப்பிக்கலாம்.

மேலும். பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். https://bcmbomw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம். கல்வி நிறுவனங்கள் மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பரிசீலித்து அடுத்த நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் Login Credential சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட தேசிய கல்வி உதவித்தொகை https://scholarships.gov.in இணையதளத்தில் அறியலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Educational assistance grant for young achievers District Collector Prathaps appeal


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->