அரசு பள்ளிகளில் பொறுப்பு ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளிகளில் பொறுப்பு ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு.!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் பொறுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசியர்களை நியமித்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவகர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிவிப்பில், “பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள், அரசு உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து, அதில் மூத்த பட்டதாரி அல்லது முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பொறுப்பு தலைமையாசிரியராகப் பணிபுரிவதால் அதற்கு பதிலியா க பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு மதிப்பூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.12,000/-, ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- வழங்கப்பட்டது.

வரும் ஆண்டுகளில் தொடக்கக் கல்வி துறை மற்றும் பள்ளிக் கல்வி துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை, மாணவ மாணவிகளின் கல்வி நலன் கருதி,ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய பள்ளிக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் அளித்து ஆணை வழங்கப்படுகிறது’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணையில் குறிப்பிட்டுள்ள அதிகாரத்திற்குட்பட்டும், சென்னை  உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்பாணைகளின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் மகப்பேறு விடுப்பில் சென்றதாலும், பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற்றுள் பொறுப்புத் தலைமையாசிரியராக பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதிலியாகவும், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக நியமனங்களை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நடப்பு கல்வியாண்டிற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் போது, சென்ற ஆண்டைவிட கூடுதலாக நியமனம் செய்யப்பட தேவை இருப்பின்,எவ்வளவு தேவை என்பதை கடிதம் மூலமாக தெரிவித்து, பின்னர் நியமனம் செய்து கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

education department order temporary staffs appointed in TN schools


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->