எடப்பாடி பழனிச்சாமி தேனி வருகை..தொண்டர்களுக்கு அதிமுக அழைப்பு!  - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டிக்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு கொடுப்பது சம்பந்தமாக தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

   தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற  தொகுதிக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவரும், ஒன்றிய செயலாளருமான லோகி ராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 சிறப்பு அழைப்பாளராக தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்ககோடை ராமர் கலந்து கொண்டு எடப்பாடியாரை வரவேற்பது குறித்து தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார் .அப்போது  எடப்பாடி யாரை வரவேற்கும் விதமாக தொண்டர்கள் அணி அணியாக திரண்டு வரவேண்டும் என்றும், அது குறித்து முன்னேற்பாடுகளை தொகுதி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து, இன்றிலிருந்து நீங்கள் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ஜெயக்குமார், ஆண்டிபட்டி ஒன்றிய துணைச் செயலாளர் அமரேசன், மருத்துவ அணி மாநில இணை செயலாளர் அனுமந்தன் உள்பட ஆண்டிபட்டி தொகுதிக்கு உள்பட ஆண்டிபட்டி நகர், ஒன்றியம், வருசநாடு ,கம்பம் ஒன்றியம், கூடலூர் நகரத்தை சேர்ந்த பல நிர்வாகிகளும் சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswamis visit to Theni A call from AIADMK for the supporters


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->