எடப்பாடி பழனிசாமி இன்று தென்மாவட்டங்களில் சூராவளி சுற்றுப்பயணம்! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தென்மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

சட்டசபை தொகுதி வாரியாக "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார். வடமாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மக்களை சந்தித்த அவர், இன்று முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். 

 இன்று சிவகங்கை மாவட்டத்தில் மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகில்,மாலை 5.30 மணி அளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில், இரவு 7.45 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாசலில்  எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.நாளை  காலை 10 மணி அளவில் சிவகங்கை சன்ராக்ஸ் மகாலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், மஞ்சுவிரட்டு பந்தயம், வடமாடு நலச்சங்கம், விவசாய சங்கம், விளையாட்டு வீரர்கள், தென்னை நார் உற்பத்தியாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடுகிறார். அதனை தொடர்ந்து மாலைமானாமதுரை தேவர் சிலை அருகில் அவர் பேசுகிறார். 

சிவகங்கை மாவட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி முதலில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் நாளை மாலை 6.30 மணிக்கும், தொடர்ந்து 2-வது தொகுதியாக திருவாடானை சட்டமன்ற தொகுதி இரவு 8 மணி அளவில் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலைய பகுதியில் மக்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

மறுநாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், காளியாட்டம் போன்ற கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அவரை வரவேற்று பேனர்கள், பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வரவேற்பு தோரண வாயில்கள், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami is on a tour of the southern districts today


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->