உன் தெய்வத்திற்கு இங்க ஒரு சக்தியும் இல்லை...! அவதார் - 3 டிரைலர் வெளியானது!
Avatar part 3 tamil trailer
2009ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான முதல் அவதார் திரைப்படம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் சாதனைபடுத்தியது. அதனைத் தொடர்ந்து, 2022ல் வெளியான அவதார் – 2 திரைப்படம் ரூ.15 ஆயிரம் கோடியைத் தாண்டிய வசூலுடன் மாபெரும் வெற்றிபெற்றது.
இப்போது, அந்த தொடரின் மூன்றாவது பாகமான “அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்” திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி முடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மிகுந்த தரத்தில் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ், வியக்கும் அளவிற்கு காட்சிப்பதிவுகள் மற்றும் உணர்வுகளால் நெகிழச் செய்யும் கதைமை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனால், ரசிகர்கள் மத்தியில் அவதார் – 3 மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.
படத்தின் புதிய கதையின் மையத்தில் "நெருப்பு மற்றும் சாம்பல்" எனும் கருப்பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பாகம், பாண்டோரா உலகில் புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் என்பதால், உலகளாவிய ரசிகர்கள் இதனை பார்க்க காத்திருக்கின்றனர்.
English Summary
Avatar part 3 tamil trailer