சேலம் பட்டாசு ஆலை தீ விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!!
edapadi palanisamy condoles to salem firecrake factory fire accdent death peoples family
சேலம் பட்டாசு ஆலை தீ விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த எட்டு பேரில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தொடர்கைதையாகி வருகின்றது. ஆகவே இந்த விடியா அரசு பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் குடோன்கள் அரசு நிர்ணயித்த விதிகளை உரிய முறையில் பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதுடன், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு உயரிய சிகிச்சையும் அவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்..
English Summary
edapadi palanisamy condoles to salem firecrake factory fire accdent death peoples family