மணல் குவாரிகளுக்கு குறி.. சல்லடை போட்டு சலித்தெடுக்கும் ED! தமிழகம் முழுவதும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனையானது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளம் ஆகிய இடங்களில் மணல் குவாரி உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் மணல் குவாரி உரிமையாளர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைக்கும் தொடர்பு இல்லை அமலாக்கத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடு, அலுவலகங்களை குறிவைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஒருவந்தூர் ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் எடுத்து வந்து குமரிபாளையத்தில் உள்ள அரசு மணல் கிடங்கில் வைத்து ஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.

அதேபோன்று வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் பாலாற்றின் அருகில் அமைந்துள்ள அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் பகுதியில் அமைந்துள்ள அரசு மணல் குவாரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனையானது நடைபெற்று வருகிறது. 

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் மணல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், ஆன்லைனின் முறைகேடாக பதிவு செய்வதாகவும், முறைகேடாக வாகனங்களில் மணல் ஏற்றி விற்பனை என என எழுந்த புகாரின் அடிப்படையில் தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ED raids 3 sand quarries in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->