கொளத்தூரில் பெரும் பதற்றம்! மு.க ஸ்டாலின் அலுவலகத்தை சுத்து போட்ட கேங்மேன்களால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்காக 15,000 மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில் 9,613 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். மீதமிருந்த 5,357 பேரும் தற்போது வரை பணி நியமனம் செய்யப்படவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காததால் தமிழக முதலமைச்சரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க ஸ்டாலினின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கேங்கேன் பணிக்காக தேர்வு எழுதிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பரபரப்பு ஏற்பட்டது.

இவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒன்று திரண்டு முதல்வர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்ட எவ்வாறு குவிந்தார்கள் என்று புரியாமல் காவல்துறையினரே குழம்பி உள்ளனர். பணிக்காக தேர்வு எழுதியவர்கள் திடீரென முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் கொளத்தூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததை அடுத்து அவர்களை குண்டு காட்டாக தூக்கிச் சென்று கைது செய்ய முயற்சி செய்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ஒரு சிலர் மயக்கமடைந்து கீழே சரிந்து விழுந்தனர்.

இதனால் போராட்ட களத்தில் மேலும் பதற்றம் அதிகரித்தது. இதனை அடுத்து போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டையமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி தமிழக முதலமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிடும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு நிலவுகிறதா? தமிழ்நாடு அரசின் உளவுத்துறை இந்த சம்பவம் குறித்து முன்கூட்டியே கண்டறியாமல் செயல்பாடு அற்று முடங்கியுள்ளதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EB exam writers besieged MKStalin MLA office


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->