ஆப்கானிஸ்தானை ஆட்டி வைக்கும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு.!
earthquake in afganisthan at today
ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 1.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக கடந்த 7-ந்தேதி ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு நான்கு ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்து விட்டன என்று தலிபான் அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இது குறித்து அந்நாட்டு பேரிடர் மேலாண் அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இருபது கிராமங்களில் இருந்த 1,983 குடியிருப்பு வீடுகள் அழிந்து விட்டன என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 11-ந்தேதி ரிக்டரில் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதன்பின்னர், 13-ந்தேதி ரிக்டரில் 4.6 அளவிலான நிலநடுக்கமும், 15-ந்தேதி ரிக்டரில் 5.4 அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் இந்த மாதத்தில் 4-வது முறையாக ஏற்பட்டது ஆகும்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
English Summary
earthquake in afganisthan at today