#ராணிப்பேட்டை || ஆற்றில் மிதந்த உடல்.. மீட்க சென்ற போலீசாருக்கு காத்திருந்து அதிர்ச்சி.!!
Drunk man floated in the river causing commotion in ranipet
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கல்லாறு ஆற்றுப்பாலம் கீழே தண்ணீரில் பாதி அளவு நீரில் மூழ்கி இருந்த ராட்சதக் குழாய் உள்ளே அமர்ந்திருந்தவாறு ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி அங்கு சென்று பார்த்த போலீசார் இறந்ததாக கூறப்பட்ட நபர் உயிரோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபரை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாம்பு என்பதும், ஆற்று பகுதிக்கு மது அருந்த வந்ததும் தெரியவந்தது.
போதை தலைக்கு ஏறிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் ஆற்றில் இறங்கி ராட்சதக் குழாயில் அமர்ந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Drunk man floated in the river causing commotion in ranipet