அரசு பேருந்தில் ஓசி பயணம் கேட்ட போதை ஆசாமிகள்: ஓட்டுநர்-நடத்துனரும் சரமாரி அடி உதை! - Seithipunal
Seithipunal


திருப்பூர், உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பருத்தியூர் கிராமத்திற்கு நகர பேருந்து சென்றது. இந்த பேருந்தில் ஓட்டுநராக பிரபாகரன் மற்றும் நடத்துனராக குமார் என்பவர் பணியாற்றினர். 

தேவனூர் புதூர் பேருந்து நிலையத்தில் இந்த பேருந்து நின்ற போது 3 பேர் ஏறினார்கள். அவர்கள் மது போதையில் நடத்துனரிடம் தங்களை இலவசமாக உடுமலைக்கு அழைத்து செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு நடத்துனர், பயண சீட்டு எடுக்குமாறு தெரிவித்தும் பயணச்சீட்டு எடுக்காததால் நடத்துனர் பொதுமக்களின் உதவியுடன் 3 ஆசாமிகளையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருசக்கர வாகனத்தில் பேருந்தை துரத்தி சென்று வழிமாறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 22) மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர பிரசாத் (வயது 19) இருவரையும் கைது செய்தனர். 

மேலும் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drug addicts OC trip in government bus driver conductor kicked


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->