தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த விவகாரம்.. மருத்துவர் இராமதாஸ் இரங்கல்..! - Seithipunal
Seithipunal


மதுரையில் உள்ள தெற்கு மாசிவீதி துணிக்கடையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதன்போது தீயணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு வீரர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டில், " மதுரை  தெற்கு மாசி வீதி துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்கும் போது இடிபாடுகளில் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு வீரர்கள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. திருவிழா நாளிலும் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிர் ஈந்த அந்த வீரர்களுக்கு வீர வணக்கம்.

மதுரை துணிக்கடை தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் இரு தீயவிப்பு வீரர்களுக்கு உலகத்தர மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்; அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன். தீபஒளி நாளில் பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss tweet about Madurai Fire Accident


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->