சென்னை (லண்டன்) "பாண்டி பஜார்" உண்மையான பெயர் என்ன தெரியுமா? டாக்டர் இராமதாஸ் பேட்டி! - Seithipunal
Seithipunal


பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் 'தமிழைத் தேடி இயக்கம்' சார்பில், தனித்தமிழ் சொற்கள் அறிவோம் பதாகை திறப்பு விழாவும், கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் அமைக்கக் கோரும் துண்டறிக்கைகளை வணிகர்களுக்கு வழங்கிய பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்தாவது, "தமிழை தமிழ்நாட்டில் தொலைத்து விட்டு, நம்மை அறியாமலேயே தமிழ் எது? பிற மொழி எது? என்று தெரியாமலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் நிற்கக்கூடிய இந்த அங்காடி "பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியனார்" அங்காடி. மிக புகழ்பெற்ற பெரியாருடன் இருந்து இணைந்து செயல்பட்ட தன்மானத் தமிழன்.

இந்த தெருவுக்கு 'சௌந்தரபாண்டியர் அங்காடி' என்று இருந்த பெயரை, நாம் எல்லோரும் சேர்ந்து 'பாண்டி பஜார்' என்று மாற்றிவிட்டோம். பாண்டி இப்போது புதுச்சேரி என்று சொல்கிறார்கள். நாம் இதற்கு பாண்டி பஜார் என்று சொல்கிறோம். 

1977-ல் ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த அரசாணையின்படி தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில் தமிழ் எழுத்தை பெரிதாகவும், பிறமொழி எழுத்துக்களை சிறியதாகவும் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அது தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனை வலியுறுத்தி சென்னையில் இருந்து என்று சொல்வதற்கு பதிலாக லண்டனில் இருந்தே சொல்லலாம். லண்டனில் இருந்து சங்கம் வளர்த்த மதுரைக்கு 'தமிழை தேடி சென்றேன்' ஆனால் தமிழை எங்கும் பார்க்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியவில்லை" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Chennai Tamil Landon pondy bazar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->