சென்னையில் எளிமையாக நடந்த டாக்டர் இராமதாஸ் இல்லத் திருமண விழா! - Seithipunal
Seithipunal


பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் இல்லத் திருமணம் சென்னையில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய உறவினர்கள், குடும்பப் பெரியவர்கள் மட்டும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறவினர்களை வாழ்த்தினார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைமை தகவல் தெரிவித்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்  அய்யா - திருமதி சரஸ்வதி அம்மையார்  அவர்களின் இளைய மகள்  திருமதி கவிதா - மருத்துவர் இரா. ஜெயகணேஷ் இணையரின் மூத்த புதல்வர்  மருத்துவர் ஜெ. நிதர்ஷனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல இணை செயலாளரும், முன்னாள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி - திருமதி பத்மினிதேவி இணையரின் மகள் ஏ.கே. சமித்ராவுக்கும் சென்னையில் நேற்று திருமணம் சிறப்பாக நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இத்திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மு.கிருஷ்ணசாமி, தேசிய தேர்வுகள் வாரியத்தின் முன்னாள் தலைவர்  பத்மஸ்ரீ மருத்துவர் அ.இராஜசேகரன் - திருமதி தில்லைநாயகி இணையர், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும்,  முன்னாள்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் - திருமதி சவுமியா அன்புமணி, மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மாலையில் மணமக்கள் வரவேற்பு நடைபெற்றது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Grandson marriage with only Family members in Chennai


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->