சின்னமனூர் அருகே ரெடிமேட் ஆடை நிறுவனத்தில் தீ விபத்து: ரூ.50 லட்சம் துணிகள், பொருட்கள் தீயில் கருகியுள்ளது..! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏதீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள், பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன.

சின்னமனூர் அருகே, ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர், ஓடைப்பட்டி சுக்காங்கல்பட்டியில் ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு திருப்பூர் நிறுவனங்களில் ஆர்டர் எடுத்து ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கிறார்.

இந்நிலையில், நேற்று இரவு திடீரென கம்பெனியில் தீப்பற்றி எரிவதாக அக்கம்பக்கத்தினர் தினேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக சின்னமனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

தகவலையடுத்து, காவல் நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு தீ மளமளவென பரவி எரிந்துள்ளது. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். தீயினால் இந்த நிறுவனத்தில் இருந்த துணிகள், 30க்கும் மேற்பட்ட மெஷின்கள், பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது.

இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. குறித்த தீ விபத்து குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலேயும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 50 lakh worth of clothes and goods were burnt in a fire at a ready made clothing company near Chinnamanur


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->